முதன்முறையாக அஜீத்தை வைத்து கௌதம் மேனன் இயக்கி வரும் படம் என்னை அறிந்தால். அஜீத் ஜோடியாக த்ரிஷா, அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ளனர். மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜ், கௌதம் மேனன் கூட்டணியில் இணைந்துள்ளார். கிட்டத்தட்ட ஓராண்டாக உருவாகி வந்த இப்படம் இந்த பொங்கலுக்கு வௌிவருவதாக இருந்தது. ஆனால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் முடியாததால் படத்தின் ரிலீஸ் தேதி ஜன. 29 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே என்னை அறிந்தால் படத்திற்கான வியாபாரம் துவங்கியுள்ளது.
தமிழகத்தில் இப்படத்தை எம்.கே. என்டர்பிரைசர்ஸ் நிறுவனம் வௌியிடுகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே சமர் படத்தை வௌியிட்டுள்ளது. கேரள உரிமையை எம்ஜி நாயரும், கர்நாடக உரிமையை காவேரி தியேட்டர்ஸும் பெற்றுள்ளன. வௌிநாடுகளுக்கான உரிமையை ஐங்கரன் நிறுவனம் பெற்றுள்ளது. அனைத்து ஏரியாக்களிலும் அதிக விலைக்கு அஜீத்தின் படம் விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுவரை 120 கோடி வரை வியாபாரம் நடத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படம் ரிலீசாவதற்கு முன்பே இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் "என்னை அறிந்தால்" மட்டும் தான் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்ய கிழே கொடுக்கப்பட்டுள்ள ஷேர் பட்டனை அழுத்தவும்.
0 comments:
Post a Comment